News

உக்ரைனை பலிகடாவாக்கும் ஐரோப்பா: அமெரிக்க முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டு

 

 

அமெரிக்கா – ரஷ்யா இடையேயான உறவு மேம்படுவதை தடுக்க, உக்ரைனை தியாகம் செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகிவிட்டன,” என்று முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஸ்காட் ரிட்டர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே, 2022 முதல் போர் நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த மாதம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு அடுத்த நாள், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என கோரினார். அதற்கு டிரம்ப் சம்மதம் தெரி வித்தார்.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர் .

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top