News

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி

 

 

உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இ்ந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

எனவே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவா கிராமம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனை கொடூரமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். மேலும் ரஷியாவை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை தேவை என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top