நேபாளத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது.
சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர்.
இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.