Canada

கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்

 

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான “Sikhs for Justice” (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது.

2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு கனடா அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் இந்த மிரட்டல், கனடா மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top