மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரே நாள் இரவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது.
சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
உள்ளூர் ஆட்களை புறக்கணித்ததால் வேலை நிறுத்தம்! சுமூக தீர்வுக்கு தொழில் சங்கம் முயற்சி
கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 2019ல் ‘இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த ஏ.டி.எப்., எனப்படும் நேச நாட்டு ஜனநாயகப்படை தொடர்ந்து காங்கோவில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு காங்கோவில் வடக்கு கிவு பகுதியில் உள்ள நிட்டோயோவில் குடியிருப்புவாசிகள் சுடுகாட்டில் குழுமியிருந்தனர்.
அப்போது ஏ.டி.எப்., கிளர்ச்சியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கத்தியால் சரமாரியாக அங்கிருந்த பொதுமக்கள் 60 பேரை வெட்டிக்கொன்றனர்.
மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.