News

சத்துருக்கொண்டான் இராணுவ முகாமில் புதையுண்டு கிடக்கும் உடல்கள்! வெளியாகிய குற்றச்சாட்டு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் (Boys Town) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஞானமுத்து குழந்தவடிவேல் கொக்குவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில், 1990 செப்டம்பர் 9ஆம் திகதி இராணுவம் கிராமத்தை முற்றுகையிட்டபோது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 186 பேர் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவலர்களும் இணைந்து கூட்டுப்படுகொலை செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த படுகொலையில் அவரது தந்தை, தாய், சகோதரர்கள் உட்பட 10 உறவினர்கள் உயிரிழந்ததாகவும், அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறிய அகழ்வு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1997ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்த விசாரணைக் குழு மூன்று இராணுவ அதிகாரிகளை குற்றவாளிகளாக அடையாளம் கண்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் நினைவூட்டியுள்ளார்.

சத்துருக்கொண்டான் இராணுவ முகாமில் புதையுண்டு கிடக்கும் உடல்கள்! வெளியாகிய குற்றச்சாட்டு | Complaint To Excavation In Army Camp In Boys Twon

 

எனவே மேற்படி அழைத்து செல்லப்பட்ட எனது குடும்ப உறவுகள் உட்பட அனைவரினதும் உடல் புதைக்கப்பட்டுள்ள பகுதியான முன்னைய சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் (BOYS TWON) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசங்களில் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top