ஆன்டிபா (Antifa) பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நெருங்கிய உதவியாளரும், வலதுசாரி அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, தீவிர இடதுசாரி பாசிச எதிர்ப்பு இயக்கமான ஆன்டிபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பல அமெரிக்க தேசபக்தர்களுக்காக, நான் ஆன்டிபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்டிபா (Antifa) பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பவர்களிடம் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.