தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பஸ்சில் போலீசார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, போலீசார் 6 பேருடன் வந்தகொண்டிருந்த போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 14 போலீசார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.