மெக்சிகோவில் (Mexico) ஆயிரக்கணக்காக மக்கள் ஒன்று திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலர் திடீரென்று காணாமல் போன சம்பவங்களை முன்னிலைப்படுத்தி, அவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ சிட்டி வீதிகளில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மெக்சிகோவில் 130,000 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள நிலையில், பல சம்பவங்களில் காணாமல் போனவர்கள் போதைப்பொருள் குழுக்களில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் போதைப்பொருள் குழுக்கள் மற்றும் குற்றச்செயல்கள் புரியும் குழுக்களால் பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர்.
இந்தநிலையில், நகரங்கள், மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.