இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த 23000 போராளிகளின் உடலங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு செய்திகளை ஊடறுத்தே ஒவ்வொரு இடத்திலும் இருந்த உடல்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டோம்.
மேலும், அப்போதைய விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்கவும் நானும் ஆளில்லா விமானங்கள் மூலம் அவற்றை அவதானித்தோம் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப் போராளிகள் 23,000 பேரை தனது தலைமையிலான படையினர் கொலை செய்ததாகவும் 12,000 போராளிகள் சரணடைந்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.