News

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 12 பேர் படுகாயம் – முதியவர் கைது

 

 

ஆஸ்திரேலியாவின் பரபரப்பான தெருவில் பொதுமக்களை நோக்கி ஒருவர் துப்பாக்கியால்  சுட்டதில், 20 பேர் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்கு புறநகர் பகுதியான க்ரோய்டன் பார்க்கில் உள்ள வ ணிக வளாகத்தின் ஒரு பகுதியில் குடியிருப்பும் உள்ளது.

இங்கு வசித்து வந்த 60 வயதுடைய ஒருவர்  அங்குள்ள தெருவில் சென்ற பொதுமக்கள், கார்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.  இந்தத் தாக்குதலில், 20 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும், இது பயங்கரவாத செயலோ அல்லது கும்பல்களுக்கு இடையேயான சண்டையோ இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top