இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது திடீரென மலை சரிந்து விழுந்ததாகவும், பேருந்து அதன் அடியில் சிக்கியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 பேருடன் சென்றுகொண்டிருந்து பேருந்தின் மீதே மலை சரிந்து விழுந்துள்ளது.
சம்பவத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பேருந்தில் இருந்து இன்னும் சிலர் மீட்கப்பட வேண்டி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.