News

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 16,000 அடி உயரத்தில் சுமார் 1000 பேர் சிக்கி தவிப்பு

 

எவரெஸ்ட் மலைச் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் அமைந்துள்ள உயரமான மலை முகாம்களில் சுமார் 1000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மோசமான பெரிய பனிப்புயலில் சிக்கி இருப்பதால் துரிதமான மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருப்பதாக சீன அரசு ஊடகத்தின் தகவல்படி தெரியவந்துள்ளது.

மலையேறிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளில் பிரபலமான முகாம் பகுதியை தாக்கிய பனிப்புயலானது வெள்ளிக்கிழமை கடுமையான பனிப்பொழிவு உடன் தொடங்கி தீவிரமடைந்துள்ளது.

கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 4,900 மீட்டர்(16000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த ஒதுப்புறமான முகாம் பகுதியானது தற்போது அதிக பனியால் மூடப்பட்டு மீட்புக்கு யாரும் செல்ல முடியாத நிலையில் சிக்கியுள்ளது.

முகாம்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பணியில் தொழில்முறை மீட்பு பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏற்கனவே சில சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top