கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த தேசிய சரணாலயம் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். டயானி விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் நீடிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமான விபத்தினை கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
