யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எமக்கு சில விடயங்களில் ஆய்வு கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம்.
தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
