ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து பேய் மழை பெய்து வருகின்றன
அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகளாக கரீபியன் தீவுநாடுகள் அமைந்துள்ளன. அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி தீவு பிராந்தியங்களான இவற்றில் கியூபா, ஜமைக்கா, பார்படோஸ், ஆண்டிகுவா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார முக்கியவத்துவம் வாய்ந்த சுற்றுலா தீவுக்கூட்டங்களாக உள்ளது.மேலும் உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் ‘கியூபா’, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து சாதனை என தன்னகத்தே பல புகழாரங்களை கொண்ட நாடாக கரீபியன் தீவு நாடுகள் விளங்குகின்றன.

இந்தநிலையில் பசிபிப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி புயலாக வலுப்பெற்றது. ‘மெலீசா’ என பெயரிடப்பட்ட இந்த புயல் ஜமைக்கா அருகே உள்ள கடலில் நிலை கொண்டது. கடந்த 174 ஆண்டுகளில் இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் அபாயகரமான அதிதீவிர புயலாக மெலீசா வலுப்பெற்றது. மணிக்கு 18 கி.மீ வேகத்தில் ஜமைக்கா நோக்கி இந்த புயல் நகர தொடங்கியது. இதனால் ஜமைக்காவில் உள்ள கடலோர மாகாணங்களில் மணிக்கு 281 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த புயலால் ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து பேய் மழை பெய்து வருகின்றன. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சூறைக்காற்றில் ஜமைக்காவில் உள்ள சுற்றுலா விடுதி மற்றும் கட்டிடங்களின் மேற்கூரைகள், மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. அங்கு மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் சர்வதேச விமான போக்குவரத்தும் சாலை, ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

இந்த புயலால் இதுவரை 15 பேர் உயிரிழந்தநிலையில் தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயலால் அங்கு 300 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசி தீவு நாட்டை சின்னாபின்னமாக்கி வருகிறது. இந்த புயல் நள்ளிரவில் கரையை கடக்கும் வரையில் மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
