துருக்கியில் 6.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.: மேற்காசிய நாடான துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தின் சிந்திர்கி நகரை மையமாகக் கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 6 கி.மீ., ஆழத்தில் இது நிகழ்ந்தது.
நிலநடுக்கத்தில் சிந்திர்கியில் காலியாக இருந்த மூன்று கட்டடங்களும், இரண்டு மாடி கொண்ட ஒரு கடையும் இடிந்து விழுந்ததாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகயா கூறினார்.
