இந்தச் சோகச் சம்பவம், பெர்னாம்புகோ மாகாணத்தின் சலோவா (Saloá) நகருக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் (BR-423) நிகழ்ந்துள்ளது.
ப்ரூமாடோ (Brumado) நகருக்குச் சுற்றுலா சென்ற சுமார் 30 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியின் ஓரத்தில் இருந்த பாறைகளில் மோதிவிட்டு, பின்னர் மணல்மேட்டில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெர்னாம்புகோ மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஏனைய பயணிகள் உடனடியாக மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் சாரதி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். விபத்துக்கான காரணம் குறித்து மத்திய நெடுஞ்சாலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 17 சுற்றுலாப் பயணிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.