News

புலம்பெயர் விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் பிரித்தானியா

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புலம்பெயர்வு விதிகளில் பாரிய மாற்றங்களை பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசு 2025 குடிவரவு வெள்ளை ஆவணத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசா மற்றும் புலம்பெயர்வு விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும். முக்கியமாக, Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு ஆங்கில மொழி திறன் தேவைகள் B1 நிலையிலிருந்து B2 நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.

இது A-Level தரத்திற்கு சமமானதாகும். மேலும், Graduate Visa காலம் 2027 ஜனவரி 1 முதல் 18 மாதங்களாக குறைக்கப்படுகிறது. PhD முடித்தவர்களுக்கு மட்டும் 36 மாதங்கள் வழங்கப்படும். 2025 ஜூலை 22 முதல், Skilled Worker விசா பெற தகுதியான வேலை பட்டியல் குறைக்கப்பட்டுள்ளது.

Social Care Workers ஆகியோருக்கான வெளிநாட்டு ஆட்சேர்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனால், போக்குவரத்து, பல் மருத்துவம் மற்றும் சிறைத் துறைகளில் உள்ள Graduate Visa வைத்துள்ளவர்கள் பாதிக்கப்படலாம். High Potential Individual வழியில் விண்ணப்பிக்க தகுதியான பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படவுள்ளது.

ஆண்டுக்கு 8,000 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். Global Talent மற்றும் High Potential வழிகளில் சில சலுகைகள் நவம்பர் 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

நிரந்தர வதிவிடத்திற்கான நிலையான தகுதி காலம் 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. ஆனால், சமூக பங்களிப்பு, வேலை, வரிவிதிப்பு, குற்றப் பதிவில்லாத நிலை போன்ற அடிப்படையில் சிலர் விரைவாக தகுதி பெறலாம்.

இந்த மாற்றங்கள், குறைந்த மற்றும் நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை குறைக்கும் போதிலும், உயர் திறன் கொண்ட நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top