News

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் உத்தரவு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொது மக்கள், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களை மேற்கோள்காட்டி இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொதுமக்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அந்த சந்தரப்பத்தில் ஆட்சியல் இருந்தவர்கள், பாதுகாப்பு துறைக்கு பொறுப்பாக இருந்த அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.

2009 இல் யுத்தம் நிறைவடைந்து இன்றுவரை அதற்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

இதற்கான விசாரணைகளை கடந்த அரசாங்கங்களும் செய்யவில்லை. இன்றைய அரசங்கமும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான விடயங்களாலேயே உள்நாட்டு பொறிமுறை எனும் விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றனர்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top