ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பது தொடர்பில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளிக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்மானம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த யுத்த காலத்தில் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சர்வதேச நீதி கோரி பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
