அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து 1,500 அடி உயரத்திற்கு கள் வெளியேறி வருகின்றன.
அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள இத்தீவில் உள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும். உலகிலுள்ள மிகவும் செயற்பாட்டுடன் இருக்கும் எரிமலைககளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது. 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த எரிமலை தற்போது வெடித்து சிதறி உள்ளது. 1,500 அடி உயரத்திற்கு கடும் சீற்றத்துடன் எரிமலை தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வருடத்தில் இருந்து இந்த எரிமலை 30வது முறையாக வெடித்துள்ளது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர். கிலாவியா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.