அமெரிக்காவில் அரச முடக்க நிலை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் கனேடிய விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, மாண்ட்ரியல் – பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்படும் பலகையில் சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய விமான நிறுவனங்களும் சில தாமதங்களை அறிவித்திருந்தாலும், பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்க எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அவர்களது பயணத்திட்டங்களில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் பல பயணிகள் இருந்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை 1,000க்கும் மேற்பட்ட விமானங்களும், சனிக்கிழமை மேலும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்களும் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சம்பளம் இன்றி பணியாற்றி வரும் நிலையில், அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விமானிகள் கட்டுப்பாட்டாளர்களின் மன அழுத்தம் மற்றும் தொடர்பின்மை குறித்து அதிக அளவில் புகார்கள் அளித்து வருகின்றனர்,” என அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சான் டஃபி தெரிவித்துள்ளார்.
