அமெரிக்காவில் இன்றையதினம் (07.11.2025) வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,000இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கம் முடங்கியதையடுத்து, விமான நிறுவனங்கள் அதன் பயணங்களை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால், நாட்டின் மிகவும் பரபரப்பான 40 விமான நிலையங்களில் உள்ள உள்நாட்டு விமானங்கள் பாதிக்கப்படும்.
இந்நிலையில், உள் விமானங்களின் எண்ணிக்கை, 4 சதவீதத்தால் குறைக்கப்படும் எனவும் அடுத்த வார இறுதிக்குள் 10 சதவீதத்தால் குறைக்கப்படும் எனவும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) அறிவித்துள்ளது.
இதேவேளை, இரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான முழு பணத்தையும் திரும்பப் பெற முடியும் என அமெரிக்காவின் பல பெரிய விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளன.
