Canada

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் குறித்த விளம்பரத்துக்காக ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தது. ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் கனடாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட்ரீகன், 1987 ம் ஆண்டு ஆற்றிய உரைகளில் சில குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.

இதனையடுத்து கனடா உடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாகவும், அந்நாட்டு பொருட்களுக்கு வரியை அதிகரிக்கப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். மேலும் கனடா பிரதமரை சந்திக்க விருப்பம் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விளம்பரத்துக்காக ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக மார்க் கார்னி கூறியுள்ளார். தென் கொரியாவில் ஆசியா பசுபிக் மாநாட்டிற்கு இடையே தென் கொரிய ஜனாதிபதி அளித்த விருந்தின் போது ட்ரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top