News

இந்தோனேசியாவில் மதவழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம்

 

 

இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட54 பேர் காயம் அடைந்தனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல பள்ளி வாசல் உள்ளது. இன்று (நவ.7) வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோர் வழிபாட்டுக்காக அங்கு வந்திருந்தனர்.

அனைவரும் வழிபாடு செய்து கொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதன் பாதிப்பு பள்ளிவாசல் அருகில் செயல்பட்டு கொண்டிருந்த பள்ளி ஒன்றிலும் எதிரொலித்தது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த போலீசார்,மருத்துவக் குழுவினர் உடனடியாக அங்கு சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டு வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட சிலர், இரு முறை குண்டுகள் வெடிக்கும் சத்தம்  கேட்டதாக கூறி உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top