கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கனடாவின் வதிவிட உயர்ஸ்தானிகராக இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளளது.
அதன்போது, இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கனடாவின் அரசாங்கத்தால் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பான நிகழ்வானது, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று(13.11) இடம்பெற்றுள்ளது.
