News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு! உண்மையை வெளிக்கொணரபடும் அநுர சபதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கம் நிறுத்தாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை வெளிக்கொணர்வோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், சிஐடி தலைவர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர இரவும் பகலும் உழைத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அவர்கள் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top