News

ஐ.நா உச்சி மாநாட்டில் பயங்கர தீ விபத்து.. சர்வதேசத்தில் ஏற்பட்ட பரபரப்பு

பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, குறித்த இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட இந்தியக் குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

ஐ.நா உச்சிமாநாட்டில் பயங்கர தீ விபத்து.. சர்வதேசத்தில் ஏற்பட்ட பரபரப்பு | Fire Break In Brazil Cop30 Climate Talks

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் ஐ.நா.வின் காலநிலை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

 

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பது குறித்து கிட்டத்தட்ட 200 நாடுகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top