கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் முதல் பட்ஜெட்டில், உலகத் தரமான ஆய்வாளர்களை ஈர்க்கும் நோக்கில் 1.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,000ற்கும் மேற்பட்ட உயர் திறமையுள்ள ஆராய்ச்சியாளர்கள் கனடாவுக்கு வரவழைக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் H-1B விசா கட்டணம் 100,000 டொலராக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கனடா H-1B விசா வைத்துள்ளோருக்கான “விரைவான பாதை”யை தொடங்கவுள்ளது.
இது அமெரிக்காவில் உள்ள திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை கனடாவுக்கு ஈர்க்கும் முயற்சியாகும். இதே நேரத்தில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் study permit-கள் 2026 முதல் ஆண்டுக்கு 155,000-ஆக குறைக்கப்படும்.
இது முந்தைய அரசு திட்டத்தில் இருந்த 305,900 பர்மிட்களுடன் ஒப்பிடுகையில் பாதியாகும். 2026 முதல் 2028 வரை, ஆண்டுக்கு 380,000 புதிய நிரந்தர குடியாளர்களை (Permanent Residents) ஏற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக குடியிருப்பாளர்களின் (Temporary Residents) பங்கு 2027-க்குள் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்த மாற்றங்கள் கனடாவின் பொருளாதார வளர்ச்சி, வீட்டு வாடகை கட்டுப்பாடு மற்றும் ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும் என முன்னணி கனேடிய நிதி நிறுவனமான Desjardins-ன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
