ரஷ்ய எல்லைக்கு அருகில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமம் ஒன்றில் 448 அப்பாவி உக்ரேனிய மக்கள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த கொடூரச் செயல் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள இசியம் நகர பைன் மரக் காட்டில் இந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிக்கு விசாரணைக்கு சென்ற உக்ரைனிய அதிகாரி, சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தால் பயணித்த போது அங்கு தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியதாக கூறியுள்ளார்.
முதலில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கு உக்ரைன் படை மீண்டும் முன்னேறியதும் ரஷ்ய படை அங்கிருந்தவர்களை கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது.
சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்ட போது, புதைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 405 பேர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்ததால், அவர்களை அடையாளம் காணும் பணி சிரமமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
