News

கென்யா கனமழையால் நிலச்சரிவு 21 பேர் பலி; 30 பேர் மாயம்

 

 

கென்யாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி, 21 பேர் பலியாகியுள்ளனர்; 30 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் மேற்கே உள்ள எல்ஜியோ மராக்வெட் கவுன்டி பகுதியில் உள்ள செசோங்கோச் என்ற மலைப்பகுதியில், கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி, 21 பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

கடுமையான காயங்களுடன் 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். மண் சரிவால் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருப்பதாக கென்யா ரெட் கிராஸ் தெரிவித்துள்ளது-. போலீசாரின் மீட்பு குழுவினருடன், ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரையோரம் மற்றும் அபாயகரமான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top