நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையில் பல பல தேசங்களில் வெள்லம் சூழ்ந்துள்ளது. எனினும் மாவீரர்களை நினைவேந்த துயிலுமில்லங்கள் உறவுகளின் கண்னீரில் குளிக்கின்றன
தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27) நினைவேந்தப்படுகின்றது .

வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன.

இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சம நேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.
அதேவேளை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

நவம்பர் 27 ஆம் திகதி மண்ணின் விடிவிற்காய் தன்னுயிர்களை ஈந்தவர்களின் நினைவேந்தல் வடக்கு , கிழக்கில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

