News

ஜப்பானில் எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புடன் சீற்றம் : விமான சேவைகள் இரத்து

ஜப்பானின் முக்கிய மேற்கு தீவான கியூஷுவில் உள்ள ஒரு எரிமலை இன்று பல முறை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எரிமவை வெடிப்பால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் சுமார் 4.4 கிலோமீட்டர் உயரத்திற்கு வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ககோஷிமா நகரத்திற்கு அருகில் கியூஷுவின் தெற்கு முனையில் அமைந்துள்ள சகுராஜிமா என்று அழைக்கப்படும் எரிமலை, அதிகாலை 12.57 மணியளவில் வெடித்தது, பின்னர் அதிகாலை 2.30 மணி மற்றும் காலை 8.50 மணிக்கு வெடித்தது. மேலும் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறும் எரிமலை : விமான சேவைகள் இரத்து | Japans Kyushu Volcano Erupts

 

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்களில் 4 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை எட்டிய முதல் வெடிப்பு இதுவாகும்.

சாம்பல் வீழ்ச்சி மற்றும் தொடர்புடைய காரணங்களால் ககோஷிமா விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் 30 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக வெளிநாட்டு பிராந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறும் எரிமலை : விமான சேவைகள் இரத்து | Japans Kyushu Volcano Erupts

 

சகுராஜிமா ஜப்பானின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும், இதில் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட வெடிப்புகள் தொடர்ந்து நிகழ்கின்றன.

2019 ஆம் ஆண்டில், அது 5.5 கிலோமீட்டர் (3.4 மைல்) உயரத்திற்கு சாம்பலைக் கக்கியதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top