மாவீரர் நாள் நினைவேந்தலானது இன்றையதினம் நல்லூரடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்க, 06.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கேப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது.


இதன்போது மண்ணின் விடுதலைக்காக வித்தாகியோரது பெற்றோரும், உரித்துடையோரும் கூறி அழுததை அவதானிக்க முடிந்தது.
நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுகளையும் மக்கள் பார்வையிட்டனர்.
