ஹமாஸ் பயங்கரவாதிகள், தங்களிடம் இருந்த 3 பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்தனர். பதிலுக்கு பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டின்படி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, சண்டை தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் இருந்த பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலும் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது. கொல்லப்பட்ட 28 பிணைக்கைதிகளில், 17 பேரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். இன்னும், 8 உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை.
காசா முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளதால், உடல்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் பணி சிக்கலாக உள்ளது என ஹமாஸ் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
