News

பிரான்சில் தற்காலிகமாக மூடப்பட்ட லூவ்ரே அருங்காட்சியகம்

பிரான்சில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம், அதன் Sully wing பகுதியில் அமைந்துள்ள Campana gallery-யை தற்காலிகமாக மூடியுள்ளது.

காரணம், 1930-களில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் கட்டமைப்பு பலவீனமாக உள்ளது.

அருங்காட்சியகத்தின் அறிக்கையின்படி, புதிய தொழில்நுட்ப ஆய்வில், இரண்டாம் மாடி கம்பிகள் பலவீனமடைந்துள்ளன என்பது தெரியவந்தது.

இதனால், முதல் மாடியில் உள்ள Campana gallery (கிரேக்க பானைகள் காட்சிப்படுத்தப்படும் பகுதி) மூடப்பட்டதுடன், இரண்டாம் மாடியில் பணியாற்றிய 65 ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவு, Apollo gallery-க்கு அருகில் உள்ளது. அங்கு பிரான்சின் கிரீட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம், அந்த பகுதியில் நடந்த 102 மில்லியன் டொலர் மதிப்பிலான நகை கொள்ளைச் சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியது.

CFDT யூனியன் பிரதிநிதி வாலெரி போட், “பல ஆண்டுகளாக கட்டிடத்தின் நிலைமை குறித்து எச்சரித்து வந்தோம். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இது பெரிய சீரழிவு” எனக் கூறியுள்ளார்.

அரசின் State auditor reportயும், அருங்காட்சியக மேலாண்மை பாதுகாப்பு மற்றும் கட்டிட பராமரிப்பை புறக்கணித்து, கலைப்பொருள் வாங்குதல் மற்றும் பிந்தைய பாண்டமிக் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக விமர்சித்துள்ளது.

லூவர் அரண்மனை, 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பல நூற்றாண்டுகள் பிரான்ஸ் அரசர்களின் அரண்மனையாக இருந்தது. பின்னர், லூயி XIV வெர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றியபின், 1793-ல் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்த மூடல், லூவரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சவால்களை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top