பிரான்சில் நபர் ஒருவர் வேண்டுமென்றே மக்கள் கூட்டத்துக்குள் காரை செலுத்தியதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இன்று காலை, பிரான்சில், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லக்கூடிய Saint Pierre d´Oléron என்னுமிடத்தில், திடீரென ஒருவர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டபடி, மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தியுள்ளார்.
அத்துடன், காரை விட்டு இறங்கிய அந்த நபர், தன் கார் மீது தீவைக்கவும் முயன்றுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் உடனடியாக அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
கார் மோதியதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
