ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை கடந்த வாரம் கல்மேகி புயல் தாக்கியது. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் பிலிப்பைன்சில் மட்டும் 224 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கல்மேகி புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் பசுபிக் பெருங்கடலில் பங்வோங் என்ற மற்றொரு புயல் உருவாகியுள்ளது. இந்த பிலிப்பைன்சின் அரோரா மாகாணத்தில் கரையை கடந்தது. கரையை கடந்த போது அரோரோ, கேட்டண்டுவானஸ், சமர் போன்ற மகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
