மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (25) மாலை மூன்று மணிக்கு திருவள்ளுவர் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சபையின் தவிசாளர் ஜெசீதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக ஊர்வலமாக பெற்றோர் உரித்துடையவர் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து பொது சுடரை இரண்டு வீரர்களை மண்ணுக்கு உவந்தழித்த சற்குணராசா தேவமனோகரி அம்மா ஏற்றி வைத்தார் ஏனைய சுடர்கள் ஏற்றபட்டதை தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெற்றுள்ளது.
உரைகள் இடம்பெற்று பெற்றோர் உரித்துடையவர் மரக்கன்றுகள் உலர் உணவுபொருட்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
