தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் தாயக பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாழும் சர்வதேச நாடுகளிலும் இன்று (27) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், முள்ளியவளை துயிலுமில்லத்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் இன்னுயிர் ஈந்த தமது உறவுளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
