News

‘மிஸ் யுனிவர்ஸ் 2025’ போட்டி மெக்சிகோ அழகி பட்டம் வென்றார்

 

தாய்லாந்தில் நடந்த, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகிப் போட்டியில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார்.

இந்த ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடந்தது. இதில், இந்தியா, மலேஷியா, மெக்சிகோ, ஜமைக்கா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இம்மாத முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மெக்சிகோ, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, வெனிசுலா ஆகிய நாடுகள், முதல் 12 இடங்களை பிடித்தன. அதற்கு முன்னதாக நீச்சலுடை சுற்றில் இந்தியாவின் மனிகா விஸ்வகர்மா வெளியேறினார்.

இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள, ‘இம்பாக்ட் சேலஞ்சர்’ அரங்கில் இறுதிப்போட்டி நடந்தது. போட்டியின் நடுவர்களில் ஒருவராக நம் நாட்டு பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடம்பெற்றார்.

முடிவில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை தட்டி சென்றார். இரண்டாம் இடத்தை தாய்லாந்து அழகியும், மூன்றாவது இடத்தை வெனிசுலா அழகியும் பெற்றனர்.

 

‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற பாத்திமா, அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பேஷன் டிசைனிங் படித்தவர். அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை, சொகுசு பங்களா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரீடம், 44 கோடி ரூபாய் மதிப்புடையது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top