News

யாழில் அதிகரிக்கும் காவல்துறை கெடுபிடி – விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்று புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவல்துறையினரின் சில கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இன்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்ற வல்வெட்டித்துறை காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இன்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது.

அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை காவல்துறையினர் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.

மாவீரர் நாள் நாளை மறுநாள் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவல்துறையினரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாழைச்சேனை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பு வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் மாவீரர்களின் நினைவு தினம் (25) நேற்று மாலை ஆறு மணி அளவில் அனுடஸ்டிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மக்களுக்காய் தனது உயிரை தந்த மாவீரன் மில்லிரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செய்தார். அதனைத்தொடர்ந்து கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செய்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top