வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திப்பட்டது


மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
