துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு செல்வதற்கான சர்வதேச கொண்டு முக்கிய பகுதிகளில் ஒன்றாகும்.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷியாவின் கருங்கடல் துறை முகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளும் சேதமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு செல்வதற்கான சர்வதேச கொண்டு முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.
துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ் நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
