News

20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம் பற்றி எரிந்து ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது

அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு விமானம் விபத்துக்குள்ளான காரணம் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம், விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகக் கூறியது, ஆனால் பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ​​ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.

துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

நடுவானில் 20 பேருடன் பற்றி எரிந்த விமானம்.. | Turkish Army Plane Crash 20 Passengers

தற்போது, ​​துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், அதிகாரிகள் இன்னும் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top