அமெரிக்காவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் அவருக்கு இருந்த கடந்த காலக் குற்றவியல் தண்டனைகள் காரணமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றங்கள் காரணமாக அவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவதற்குத் தகுதியற்றவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் அதன் தரவு பகுப்பாய்வு ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளராக பணியாற்றியதுடன், சந்தைப்படுத்தல் உதவிப் பேராசிரியராகவும் பட்டியலிடப்பட்டிருந்தார்.
குணசேகர தொடர்பில் மேலும் குடியேற்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளின் காவலில் உள்ளார்.
அவர் தற்போது எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் வெளியிடவில்லை.
