News

அமெரிக்காவுக்குள் நுழைய புதிய விதிகள்: கனேடியர்களுக்கு உருவாகியுள்ள குழப்பம்

அமெரிக்கா, மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவது தொடர்பில் புதிய விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், அவை கனேடியர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளன!

இம்மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல், மற்ற நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடர்பில் புதிய விதிகள் அறிமுகமாக உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து, ஏஞ்சலா மற்றும் லீ ஃபாபர்ட் ஆகியோர் வாஷிங்கனுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய அமெரிக்க எல்லை அதிகாரிகள், லீயை மட்டும் அழைத்துச் சென்று அவரது கைரேகை முதலான அடையாளங்களை பதிவு செய்ததுடன், அவரை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

அவருக்கு 30 டொலர்கள் கட்டணமும் விதிக்கப்பட்ட நிலையில், ஏஞ்சலா, Secure Certificate of Indian Status அட்டை வைத்திருந்ததால், அவரது அடையாளங்களை பதிவு செய்யவில்லை.

அதேபோல, வின்னிபெகைச் சேர்ந்த Owa Schlaikjar மற்றும் Yvonne Fostey ஆகியோர் அமெரிக்கா செல்லும்போது, தாங்கள் சோதனையிடப்படலாம் என எதிர்பார்த்ததால், I-94 form என்னும் படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு சென்றுள்ளனர்.

அதை அவர்கள் எல்லையில் கொடுக்க, எல்லையிலிருந்த அதிகாரிகளோ, இது என்ன படிவம், இதெல்லாம் தேவையில்லை, நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்க்கச் செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

ஆக, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும்போது எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே செல்லுமாறு கனேடிய சட்டத்தரணிகள் மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.

ஆனால், சிலரோ, இந்த தொல்லையெல்லாம் எதற்கு, பேசாமல் அமெரிக்கா செல்வதையே தவிர்த்துவிடுவோம் என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top