அமெரிக்காவில் உள்ள பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.:
அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள்.
அமெரிக்காவின் ரோடு தீவு மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலையில் மாணவர்கள் இறுதித்தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்து, உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை சீராக உள்ளது.
சம்பவம் பற்றி அறிந்து அந்த பகுதிக்கு சென்று, நிலைமையை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மர்ம நபர் தப்பி விட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த பகுதியை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.
இதுபற்றி பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா கூறும்போது, கருப்பு உடையில் வந்த ஆண் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் எப்படி பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஹோப் ஸ்ட்ரீட் வழியே அவர் தப்பி சென்றுள்ளார் என உறுதியாக கூறினார்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், இது பயங்கரமான செயல் என்றார்.
