அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் ஜனநாயகத்தை விமர்சித்து தேர்தல் நடத்த வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இரு நாடுகளுக்கிடையே அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறது.
ரஷ்யா உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் இன்னமும் மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019லேயே காலாவதியானது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளது; எனவே தேர்தல் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் ஜனநாயகமில்லாத நாடு என்று விமர்சித்தார். ஜெலன்ஸ்கி தேர்தலை தவிர்க்க போரை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இதனால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் 60 முதல் 90 நாட்களில் தேர்தல் நடத்த தயார் என, அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அறிவித்தார்.
